அடிப்படை வசதிகளேனும் இன்றி அல்லலுறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

இறுதி யுத்தத்தின் போது தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அடிப்படை வசதிகளேனும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, குறிப்பாக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 73ஆவது நாளை எட்டியுள்ளது.

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் குறிப்பிடுகையில், கடந்த 2006ஆம் ஆண்டு தனது மகன் காணாமல் போனதாகவும் தற்போதுவரை எவ்வித வசதிகளும் அற்ற நிலையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக தாம் குடியிருக்கும் கிடுகு வீட்டில், கிடுகுகள் முறிந்து கிடப்பதாகவும் வீட்டிற்குள் தண்ணீர் வருவதாகவும் அத்தாய் குறிப்பிட்டார். உணவுக்கு வழியின்றி தவித்த நாட்கள்கூட உண்டென அந்த வயோதிபத் தாய் கவலையுடன் குறிப்பிட்டார்.

இவ்வாறு குடும்பத்தை கட்டிக்காத்து வந்த ஆண் பிள்ளைகளையும், குடும்பத் தலைவர்களையும் தொலைத்த குடும்பங்கள், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போனதால் இன்று இரவு பகலாக, சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s