யார் அடிக்கல் நாட்டினாலும் இ.தொ.கா தான் கொண்டுவந்தது

இன்று, ஆட்சி மாற்றம் காரணமாக பல்வேறு நபர்கள், அடிக்கல் நாட்டினாலும் அந்த அபிவிருத்தி யாவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுவந்த அபிவிருத்தி தான்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்டச் சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று, கொட்டகலை தொண்டமான் தொழில்நுட்பப் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில், இன்று (26)  நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்திய அரசாங்கத்திடம், 23 தடவைகள் பேசித் தான், 4,000 வீடுகளைப் பெற்றுக்கொண்டோம். அதற்கு இன்று, ஏனையவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள்.

“எனவே, மலையகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், இலங்கை காங்கிரஸினால் கொண்டுவரப்பட்டது.

“ஆகவே, கடந்த காலங்களில் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து செயப்பட்டதன் மூலம் தான், எங்களுக்கு பாரிய அபிவிருத்தியினை மேற்கொள்ள முடிந்தது. எனவே, சகலவற்றினையும் தீர்மானிப்பது உங்கள் சக்தி தான்.  நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்களுக்குத் தேவையான அத்தனையும் பெற முடியும்” என்று, அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ், முன்னாள் கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s