தொழில் வழங்காவிடின் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை

கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என வேலையற்றப் பட்டதாரிகளும் அவர்களது உறவிர்னர்களும் மட்டக்களப்பில் இன்று சத்தியப்பிரமாணம் செய்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் முன்னெடுக்கும் போராட்டம் 34 ஆவது நாளை எட்டியுள்ளது.

பேராட்டத்திற்கு வலுசேர்கும் வகையில் இன்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சவப்பெட்டிக்கு மலர் வலையம் வைத்து ஈகைச்சுடர் ஏற்றி, வேலைவாய்ப்புகளை வழங்காவிடின் இனிவரும் காலங்களில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என இதன்போது சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.

இதேவேளை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது போராட்டம் 28 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் போராட்டம் 28 ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்றது.

மேலும் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் 25 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையிலுள்ள, கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s