ஒன்றிணைந்த எதிரணி போல் தான் தமிழக அரசியல்வாதிகளும்

தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், இலங்கையின் ஒன்றிணைந்த எதிரணி போன்று தீவிரப் போக்குடையவர்களே என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உதவி நிறுவனமொன்றால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கிவைப்பதற்காக இலங்கைக்கு வரவிருந்த இந்திய நடிகர் ரஜினிகாந்த் நிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து  தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக, டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் எம்.பி, “தமிழ்நாடு அரசியல்வாதிகளின் உண்மையான தன்மை, மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் மக்களுக்காக உதவுவதற்கு, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைக் கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

அதற்கு ஆங்கிலத்தில் முதலில் பதிலளித்த அமைச்சர் மனோ, “ஆம். பிரிக்கப்படா இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமாகத் தேசிய பிரச்சினையைத் தீர்க்க முயல்வதைக் குழப்பும் ஒன்றிணைந்த எதிரணியின் அரசியல்வாதிகளின் உண்மையான தன்மைக்கான, தீவிரப் போக்குடைய எதிராளிகளே” என்று தெரிவித்தார்.

பின்னர் தமிழில் பதிலளித்த அமைச்சர், “நாமல், அவர்கள் உம் தமிழக மச்சான்ஸ். இங்கே அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை தடுக்கும் உம்மைபோல” என்று பதிலளித்தார்.

முன்னதாக, வேறொரு டுவிட்டர் கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இன்று, ஈழவாதிகளை விட தெற்கின் பேரினவாதிகள்தான், தமிழீழம், பிரிவினை, மீண்டும் யுத்தம் ஆகியவற்றுக்கான சூழல்களை வேகமாக உருவாக்குகிறார்கள்.

“துவேசம் மூலம் அதிகாரப் பகிர்வு, மொழி சமத்துவம் ஆகியனவற்றை எதிர்த்து அரச/அரசற்ற பயங்கரவாதங்களை முன்னெடுக்கிறார்கள், வணக்கத்துக்குரிய பேரினவாதிகள்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s