மட்டு முன்னாள் மேயரின் வீட்டில் கோடரி வெட்டு! நபரொருவர் படுகாயம்!

_92996704_036916020-1மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் மேயரின் வீட்டில் நபரொருவர் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று காயமடைந்த நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்டில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேவேளை சிவகீதாவின் கணவரைப் பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் ஒக்ரோபெர் 23ஆம் திகதி மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும், அதனைத் தொடர்ந்து சிவகீதா பிரபாகரன், அவரது கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில்,

டிசெம்பர் 05 2016 அன்று நான்கு சந்தேக நபர்களும் தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி ஒப்பமிட வேண்டும். இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக 2008 தொடக்கம் 2013வரையில் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s