நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்

 பார்சிலோனா:
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நாளை முதல் துவங்க இருந்தாலும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இன்றே அறிமுக விழாக்களை நடத்த துவங்கியுள்ளன. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா அறிமுக விழா ஏற்கனவே அறிவித்ததை போன்று நடத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் தொழில்நுட்ப சந்தையில் கால் பதிக்கும் நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. பின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 3310:
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நோக்கியா 3310 பீச்சர்போனினையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் காட்சியளிக்கும் நோக்கியா 3310 நான்கு கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது. ஒரு மாத கால பேட்டரி ஸ்டான்ட்பை, பழைய கிளாசிக் ஸ்நேக் கேம்  உள்ளிட்டவை கொண்டுள்ள புதிய நோக்கியா 3310 EUR49 அதாவது இந்திய மதிப்பில் ரூ.3448.62 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரிஸ மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 3310 சிங்கில் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு வித மெமரிக்களில் வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கியா 3310 உடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. அந்த வகையில் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவரவான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நோக்கியா 3:
5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
நோக்கியா 5:
5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
நோக்கியா 6:
5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s