தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு இந்தியாவே பயிற்சி வழங்கியது

_92996704_036916020-1தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சீனா ஆயுதங்களை வழங்கியிருந்தாலும், இந்தியாவே இராணுவத்துக்கான பயிற்சிகளை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தினரின் போருக்கு சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஆயுத தளபாடங்களை வழங்கின. அதேவேளை, இந்தியா ஆயுதங்களை வழங்காவிடினும், படையினருக்கான பயிற்சிகளை வழங்கியது.

வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படும் படையினரில் 80 வீதமானோருக்கு இந்தியாவே பயிற்சி அளித்தது. தமிழ்நாட்டில் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவினால் ஆயுதங்களை வழங்க முடியவில்லை. எனினும், எமது அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பல வழிகளில் இந்தியா எமக்கு உதவியது.

இராணுவத்தில் பிரதானமாக சீன ஆயுதங்களே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆயுதங்களுக்கு நாம் சீனாவையே நம்பியிருந்தோம். பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரேன், போன்ற நாடுகளும் எமக்கு ஆயுத தளபாடங்களை வழங்கின.

கடற்படைக்கான டோறா படகுகளையும், கிபிர் போர் விமானங்களையும், இஸ்ரேல் வழங்கியது. சண்டை வாகனங்களையும், மிக் போர் விமானங்களையும் உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வழங்கின.” என்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s