கடும் அமளியோடு சட்டசபை கூட்டம் தொடங்கியது

1b060284608aaf0ca1b7fc9d446a3224முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டம் தொடங்கியது, இந்த சட்டசபையில் 6 பிரிவாக வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

இதில் 1,2,3வது பிரிவுகளில் எடப்பாடி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் அமரவைக்கப்பட்டதுடன், 4வது பிரிவில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ளனர்.

5, 6வது பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ளனர்.

குறித்த கூட்டத்தில் அதிமுக புதியகொறடாவாக நியமிக்கப்பட்ட செம்மலையை பேச அனுமதிக்குமாறு திமுக பொதுச்செயலாளர் ஸ்டாலின் தெரிவித்ததால் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

மேலும் இரகசிய வாக்கெடுப்பு நடாத்துமாறும் திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் கோரியுள்ளதாகவும் இதனால் பெரும் பரபரப்புடன் 230 எம்எல்ஏ-க்களுடன் சட்டசபை கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு

அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கட்டாயப்படுத்தி சிறைக்கைதிகளை போன்று அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதே ஜனநாயகம் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், எம்எல்ஏ-க்களை தொகுதிக்கு அனுப்பி மக்களின் குரலை பதிவு செய்த பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கூவத்தூரில் நடந்த விடயம் பற்றி பேச ஓபிஎஸ் தரப்புக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s