யாழ்.நகரில் 22ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம்!

1b060284608aaf0ca1b7fc9d446a3224கேப்பாப்புலவு மக்களுக்கும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் ஆதரவுதெரிவித்து தெற்கு சகோதரர்களும் இணையும் மாபெரும் மக்கள் போராட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்.நகரில் நடைபெறவுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து யாழ்.நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி இந்த போராட்டத்தை நடாத்தவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்கள் எந்த நிபந்தனையுமின்றியும், தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?

காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன?அரசே பதில் சொல்! அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல்.

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம். இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு. போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22 ஆம் திகதி தெற்கு மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நடுத்தெருவில் விடப்பட்டவர்களாகவும், அவல வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் நல்லாட்சி என சொல்லிக்கொள்ளும் அரசாங்கமும், அதோடு ஒட்டிக்கொண்டு சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் மக்களின் துன்பங்களையும், அவலங்களையும் கண்டுகொள்வதாக இல்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுமின்றி அநாதைகளாக நின்று தமது உரிமைகளுக்காக தனித்து நின்று போராடிக்கொண்டிருக்க,

அரசுக்கு சேவகம் செய்யும் சில தலைவர்கள் தமக்கு இடம்பிடிப்பதற்காக அவ்வப்போது மக்கள் தாமாக நடாத்தும் போராட்டங்களில் கலந்துகொண்டு தங்களை மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.

ஆனால், அவர்களின் போலி வேஷத்தை மக்கள் இணங்கண்டு கொண்டுவிட்டனர். இனிமேல் இவர்களின்” பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்” என்ற இரட்டை வேசத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தமிழ் தலைமைகள் ஒருமித்த குரலாக பாராளுமன்றத்தில் அழுத்தங்களை முறையாக கொடுத்திருந்தால், மக்களின் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைப் பெற்றிருக்க முடியும்.

அப்படி ஒரு தீர்வு கிடைத்திருந்தால், கேப்பாப்புலவு மக்கள் பனியிலும், வெயிலிலும் வாடி நாட்கணக்கில் ஒரு போராட்டத்தினை நடாத்த வேண்டி வந்திருக்காது.

மக்கள் போராடிக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலும் கூட தலைவர்கள் அரசாங்கத்தினைப் பாதுகாக்கவும், அனுசரணையாளர்களாக செயற்படுத்துவதிலும், போட்டி போடுகின்றனர். ஆனால், வாக்களித்த மக்களின் துன்பங்கள் அவர்கள் சிந்தும் கண்ணீர் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

எனவே, நல்லாட்சி வேடமிட்டுள்ள அரசாங்கம் எம்மத்தியில் உள்ள கையாலாகாத் தலைவர்களும், கோடாரிப்பாம்பாக செயற்படும் தலைவர்களும் இணக்க அரசியல் என்றிருப்போரும் உள்ளவரையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்கப்போவதில்லை.

“மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வினைப் பெற்றுத்தரும்” எனவே போராடும் மக்களுக்கு பலம் சேர்க்க அனைத்து மக்களையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s