மைத்திரியின் நேரடிப்பதில் வேண்டும் – கேப்பாபிலவு மக்கள்!

1b060284608aaf0ca1b7fc9d446a3224தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலங்களை விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அறிவித்துள்ளார்.

எனினும் இதனையும் புறந்தள்ளி 15ம் நாளாக போராட்டம் தொடர்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதியே தமக்கு முடிவை வழங்க முடியுமென மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட வடிவத்தை தீவிரப்படுத்தி காணி விடுவிப்பை துரிதப்படுத்தும் வகையில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க எமக்கு ஆதரவினை வழங்கும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் முன்வர வேண்டுமென கேப்பாபிலவு மக்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

போராட்டத்தை பல்வகைப்படுத்தி தீவிரப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன்மூலம்தான் அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பிரச்சினை தொடர்பில் பாரிய அழுத்தம் ஒன்றினை வழங்க முடியும். ஆதரவாக குரல்கொடுக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கொழும்பில், இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக, மீள் குடியயேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், அலைபேசியூடாக தெரிவித்ததாக, முல்லைதீவு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், தமது காணிகளுக்கு செல்லும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s