நான் எதற்கும் பயப்படவில்லை: சசிகலா

1b060284608aaf0ca1b7fc9d446a3224நான் எதற்கும் பயப்படவில்லை; அனைவரும் தைரியமாக இருங்கள்’ என கூவத்தூரிலிருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா கூறினார்.

கூவத்துார் சொகுசு விடுதியில் இருந்து புறப்பட்ட சசிகலா, சென்னை போயஸ் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

நாம் சிங்கம்:போயஸ் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வே தமிழகத்தை என்றும் ஆள வேண்டும். நான் எதற்கும் பயப்பட வில்லை. அனைவரும் தைரியமாக இருங்கள். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லி உள்ளார். அதன்படி, சிங்கம் போல் நம் ஜெயலலிதா இருந்தார். அவரை போல் நாமும் சிங்களாக இருப்போம். நான் எங்கிருந்தாலும் அ.தி.மு.க., நினைவுடன் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

1b060284608aaf0ca1b7fc9d446a3224

4 ஆண்டுகள் சிறை:முன்னதாக, சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சரண்:இந்நிலையில், சசிகலா நாளை (பிப்.,15) காலை பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி அசோக் நாராயணா முன் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s