கசப்புகளை மறந்து ஒன்றுபடுவோம்: பன்னீர் அழைப்பு

ஜெ., விட்டு சென்ற பணிகளை, ஒற்றுமையுடன் தொடர, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்’ என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:என் நிலைப்பாட்டுக்கு, மாநிலம் முழுவதும், கட்சி வேறுபாடின்றி, அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கட்சி தொண்டர்கள், ஒட்டுமொத்தமாக ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் ஒத்துழைப்போடு, ஜெ., வழியில், இரு மாதங்களாக, அனைத்து தரப்பினரும் பாராட் டும் வகையில், ஜெ., ஆட்சியை, அவர் இல்லை என்ற குறை தெரியாதவாறு, தொடர்ந்து நடத்தி

வந்தோம்.சில நாட்களாக, ஜெ., ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடர்வதில், தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, கட்சிக்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து, ஜெ., நல்லாட்சி தொடர வேண்டியது, நம் அனைவ ரின் கடமை. இதுவே, மானசீகமாக, ஜெ.,க்கு நாம் செலுத்தும்நன்றி கடன்.

பொதுமக்கள், எம்.ஜி.ஆர்., வழியில், ஜெ., நல்லாட்சி தொடர வேண்டும் என்ற காரணத்தினாலேயே, நமக்கு ஓட்டளித்து, வெற்றி பெற வைத்தனர்.ஜெ., இல்லாத சூழலில், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், எதை விரும்புகின்றனர் என்பது, உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியில் செல்வது தான், எம்.எல்.ஏ.,க்களாகிய நம் அனைவரின் கடமை.

எனவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும்,மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றபடி நல்ல முடிவு எடுத்து, செயல்பட வேண்டும். தற்காலிகமாக நமக் கிடையே ஏற்பட்ட, சில கசப்பான நிகழ்வுகளை மறந்து, நாம் அனைவரும், எப்போதும் போல ஒற்றுமையுடன் இருக்கவும், அவரவருக்குரிய

முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல் படுவ தில்,எவ்வித தயக்கமும் இருக்காது; இதை, அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருகின்றனர்;அதற்கு,இடமளிக்க கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆன்மா மன்னிக்காது. ஜெ., தன் வாழ்நாள் முழுவதும், எந்த கொள்கை காக வாழ்ந்தாரோ, அதை தொடர்ந்து கடை பிடித்து, அவர் விட்டு சென்ற பணிகளை, நாம் ஒற்றுமை யுடன் தொடர, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s