வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த அச்சுறுத்தல்

1021068475போர் வெற்றியைக் காட்டிக்கொடுக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ள சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, சிறீலங்காவில் துறைமுகள் மற்றும் நிலங்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

நுகேகொடவில் நேற்று மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தபின்னர், இனி வீட்டில் ஓய்வெடுப்போம் என எண்ணி ஜனவரி மாதம் 9ஆம் திகதி காலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதனமுல்லவுக்கு சென்றேன். தற்போது ‘உங்களுக்கு ஓய்வில்லை, நீங்கள் மீண்டும் வரவேண்டுமென அழைத்தது’ நீங்கள்தான்.

ஓய்வு பெற்ற என்னை மீண்டும் இழுத்தெடுத்தது மைத்திரிபால சிறிசேனவே என மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டைப் பிளவு படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகின்றார்கள்.

போர் வெற்றியை காட்டிக்கொடுக்க முயல்கின்றார்கள். இந்த வரலாற்று போர் வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடமும் தலைவரிடமும் உள்ளது. எனவே காட்டிக்கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

மேலும், என்னுடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஆட்சியாளர் தேர்தலை நடாத்தி, என்னுடைய சுயநலனுக்காக தோல்வியடைந்ததாகக் கூறுகின்றனர்.

நான் வெளிநாடுகளிடம் கடனைப் பெற்று நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டதால்தான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தேன் என கூறுகிறார்கள். அப்படியெனில் நாடு கடனில் இருக்கும்போது நீங்கள் ஏன் ஆட்சிக்கு வந்தீர்கள் என நான் கேட்கின்றேன்.

தற்போதைய தலைவர்கள் விளக்கமற்ற கதைகளைக் கூறிக்கொண்டு வருகின்றனர்.

அரச நிறுவனங்கள் அம்பாந்தோட்டை, திருகோணமலைத் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளனர். அத்துடன், கொழும்பில் 8 ஹெக்டயர் நிலப்பரப்பை விற்பனை செய்யவுள்ளனர்.

இந்த அரசாங்கத்திடமிருந்து நிலங்களைக் கொள்வனவு செய்பவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s