நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது!

38be819700000578-3805493-image-a-13_1474729039899நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஜெனீவா செல்லவுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை அரச சார்ப்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கனவு அமைப்பு எனவும், அந்த அமைப்பு கற்பனையில் ஆட்சிசெய்கின்றது எனவும் அண்மையில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s