சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கில் 3பேர் பலி!

38be819700000578-3805493-image-a-13_1474729039899நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 3 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நாட்டில் தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் மட்டக்களப்பில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மண்முனைப் பற்றுப் பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நெடுந்தீவுப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதால் மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதால் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் இதுவரை 71 இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு, மேற்கு மாகாணங்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான காற்றினால் நான்கு வீடுகள் முற்றாகச் சேதமடைற்துள்ளதுடன் 206 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் கடந்த 72 மணித்தியாலத்துக்குள் 236மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடிமின்னல் குறித்து மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை அவதானிப்பு மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s