கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடாது விட்டால் துரோகிகளாக கணிக்கப்படுவோம்- றிசாட் பதியுன்

38be819700000578-3805493-image-a-13_1474729039899கருத்து  வேறுபாடுகளை மறந்து எமது  அரசியல் தலைமைகள் சகோதரர்களாக  ஒன்றுபடாது விட்டால் நாங்கள் இந்த நாட்டின் வரலாற்றிலேயே  துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாக நாம்  கணிக்கப்படுவோம் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் நடைபெற்ற  சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடகால யுத்தம் இந்த மாகாணத்தை மிகவும் பாதிக்கச் செய்தது. மாகாணத்தில் இருந்த பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்வதை பார்க்கிறோம். இந்தியாவிலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இன்று தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் தமது கட்சி வேறுபாடுகளை தவிர்த்து நாட்டின் நலனுக்காக செயற்படுகின்றனர்.

30 வருடமாக துன்பத்தில் இருக்கின்ற மக்களின் கண்ணீரை துடைக்க வட கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடந்த கால வரலாறுகள்  எமக்கிடையில் பல பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்டுபடுத்தி இருந்தாலும்   இருவேறு கொள்கைகளை உடைய சிறீலங்கா சுகந்திர கட்சியும்  ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்திருப்பதைப் போல வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் பேசும் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டும்.

விடுதலைப்  புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய அல்லது சரணடைந்த பன்னிரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் பொருளாதார வளம் இன்றி இருக்கின்றனர். எனவே அவர்களையும் பலப்படுத்தி ஏனைய மக்களோடு ஒன்று சேர்க்கவேண்டும். அதே இங்கிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்களை அவர்கள் வாழ்ந்த மண்ணிலே குடியேற்ற வேண்டும். அதே போல் இந்தியாவில் அகதிகளாக இருக்கின்ற தமிழ் அகதிகளையும் இங்கு குடியேற்ற வேண்டும்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலை, சீமேந்து தோழிற்சாலை ஆகியவற்றை மீளவும் திறப்பதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களினதும்,  போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

நாம் எல்லா கருத்து வேறுபாடுகளையும் மறந்து எமது  அரசியல் தலைமைகள் சகோதரர்களாக ஒன்றுபடாது விட்டால் நாங்கள் இந்த நாட்டின் வரலாற்றிலேயே  துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாக கணிக்கப்படுவோம்.

வடக்கு, கிழக்கு  மாகாண சபை முதலமைச்சர் உட்பட்ட உறுப்பினர்களையும் வடகிழக்கில் இருக்கின்ற அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் ஒன்றுபட்டு உழைப்போமாக இருந்தால், வடக்கு கிழக்கு மாகாணங்களும் முன்னேற்றகரமான  நிலைக்குச் செல்லும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s