வில்லியே-லூ-பெல்லில் இளைஞன் சுட்டுக் கொலை..

7ab9bed798824c478024a6d1def4ce8a_18நேற்று நள்ளிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடையில் வில்லியே-லூ-பெல்லில் (Villiers-le-Bel – Val-d’Oise) படுகொலை ஒன்று நடந்துள்ளது.

இங்குள்ள  Puit-la-Marlière  இல் வசிக்கும் இஸ்மாயில் (Ismaël) என்ற 23 வயது இளைஞனே murs-de-Monseigneur  இலிருக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் இங்கு வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது மிகவும் கொடூரமான விடயம்» என இந்தப் பகுதியின் சோசலிசக் கட்சியின் நகரபிதாவான  Jean-Louis Marsac தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு இந்தப் படுகொலையினால் இந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் குடும்பம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்த இளைஞனை எனக்குத் தெரியாது. ஆனாலும் இவர் எந்த வம்பிற்கும் போகாத அமைதியான இளைஞன் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்படைந்த இந்தக் குடும்பத்திற்காக நாம் இன்று ஒன்று கூடுகின்றோம்» எனவும் நகரபிதா தொடர்ந்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியினை இன்று காலை சற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவற்துறையினர், சாட்சியங்களைக் கோரிநிற்கின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s