பல்லாவரத்தில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை

evening-tamil-news-paper_65615046025சென்னையை அடுத்த பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அபுசாலி (வயது 34).இவர், பல்லாவரம் நகர அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளராக இருந்து வந்தார்.

அபுசாலி பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியில் திருநீர்மலை சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் வழக்கம்போல் அவர் கடையில் இருந்தார். கடையின் உள் பகுதியில் 5 ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கடையின் முன்பகுதியில் அபுசாலி அமர்ந்து இருந்தார்.

அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 3 பேரும், முகத்தை துணியால் மூடியபடி ஒருவரும் என மர்மநபர்கள் 4 பேர் அவரது கடைக்குள் புகுந்து, அவரை சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த அபுசாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு காரில் தப்பிச் சென்றதாக தெரிகிறது. அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வருவது, அபுசாலியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் அபுசாலியின் சித்தப்பாவான கிண்டியை சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது அலி என்பவரை ரூ.2 கோடி பணம் கேட்டு நெல்லையை சேர்ந்த பிரபல தாதா ரபீக் என்பவர் கடத்தினார். இதுதொடர்பாக போலீசார் ரபீக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை தாதா ரபீக், கிண்டி உள்பட சென்னையில் பல இடங்களில் வியாபாரிகளை மிரட்டி பல ஆண்டுகளாக பணம் பறித்துவந்தது தெரியவந்தது. முகமது அலி கடத்தப்பட்டபோது அபுசாலி தான் அவரை போலீசில் புகார் செய்ய வைத்து, ரபீக்கை கைது செய்ய வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

எனவே ரபீக் கைதானதற்கு அபுசாலி தான் முக்கிய காரணமாக இருந்தார் என்பதால், வியாபாரிகளிடம் தன் மீது பயத்தை ஏற்படுத்துவதற்காக ரபீக் தான் சிறையில் இருந்தபடியே அபுசாலியை தீர்த்துக்கட்டிவிட்டதாக அபுசாலியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட அபுசாலிக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s