தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா..

7ab9bed798824c478024a6d1def4ce8a_184லைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது.

வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு.  தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14-ஆம் தேதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது.
‘தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது… அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர்றாங்க’ என்று நெகிழ்கின்றனர் ஆதரவாளர்கள்.  சென்னை மாநகராட்சி சேர்மன் மற்றும் எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன், பெரம்பூர் தொகுதி முன்னாள் பகுதிச் செயலாளர் எஸ்.எம்.மாரிமுத்து, திரு.வி.க.நகர் முன்னாள் இளைஞரணி பகுதிச் செயலாளர் எபிநேசன், ஆர்.கே.நகர். சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி போன்ற சென்னையின் முக்கிய நிர்வாகிகள் தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ஆம் தேதியன்று சென்னையில் பகுதி வாரியாக பொதுக் கூட்டம் நடத்தும்படி அ.தி.மு.க தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயுள்ளது. தலைமையின் உத்தரவுப்படி வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா,  பகுதிச் செயலாளர்களைக் கூப்பிட்டு கூட்டத்தை நடத்தும்படி சொல்லியிருக்கிறார்.
ஆனால், எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன்  “அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது நான் கூட்ட ஏற்பாடுகளை செய்ய மாட்டேன்” என்று சொல்லி விட்டாராம்.
எழும்பூர் பகுதிக் கழக ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் மனோபாலா பேசுகிறார் என்று  போஸ்டர் அச்சடிக்கும் வேலைகளும் நடந்து விட்டது. இந்த நிலையில்தான், “கூட்டம் போடுவதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம், கூட்ட ஏற்பாட்டில் என் பெயரையும் போட வேண்டாம்” என்று பாலகங்காவிடம்  மகியன்பன் சொல்லியிருக்கிறார்.
ஜனவரி 17 அன்று  எழும்பூரில் நடக்கிற கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற உறுதியோடு பொங்கலன்று  தீபாவையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மகியன்பன்  திரும்பியிருக்கிறார்.
“பாலகங்காவை  மீறி, கூட்டத்தைப் புறக்கணித்ததோடு, தீபாவை பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்லி  விட்டு வந்ததாக  சொல்கிறார்களே?” என்று மகியன்பனிடம் கேட்டதும்,  “நீங்க கேள்விப்பட்ட அத்தனை தகவல்களும் உண்மைதான்… நாங்கள் தீபாம்மாவை பார்த்து விட்டுத்தான் வந்தோம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
மகியன்பனுடன்  வந்திருந்தவர்கள், “சென்னை மாவட்டமே  இரண்டொரு நாளில் காலியாகி விடப் போகிறது பாருங்கள்… இனி தீபாம்மாதான் கட்சியின் எதிர்காலம். இப்போது  சென்னையில் உள்ள 15 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் வந்திருக்கிறார்… அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும்” என்றனர். தீபாவுக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து சசிகலா வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் வெளியான ஜூனியர் விகடன் இதழ் சர்வேயில் தீபாவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிவந்துள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் சசிகலா, தனது ஆதரவை அதிகரிப்பதற்கான வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் டூர் போவது உள்ளிட்ட திட்டங்களை அவர் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s