இறந்த மனிதன் சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து பேசினார்!

51சீனாவில் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் ஒருவர் எழுந்து இங்கே என்ன நடக்கிறது என்று குடும்பத்தாரிடம் பேசிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Sichuan மாகாணத்தின் Junlian பகுதியைச் சேர்ந்தவர் Huang Mingquan. இவருக்கு 75 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் உள்ளார்.

இவர் கடந்த சில வாரங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அதன் காரணமாக சரிவர உணவு எடுத்துக் கொள்வதில்லை, இதனால் குடும்பத்தார் எந்த நேரத்திலும் இவர் இறக்க நேரிடும் என்று நினைத்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சு நின்றுள்ளது அதுமட்டுமின்றி அவரது கை மற்றும் கால் பாதங்கள் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளன. இதைக் கண்ட அவரின் மகன் மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக கருதியுள்ளனர்.

இறந்தவருக்கு என்ன இறுதி சடங்கு செய்வார்களோ அதே போன்று பேனர்கள், மாலைகள் மற்றும் சவப் பெட்டிகள் என அனைத்தையும் தயார் செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்துள்ளனர்.

சுமார் எட்டு மணி நேரம் கழித்து திடீரென்று சவப் பெட்டியில் இருந்த அவர் எழுந்து இங்கே என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதைக் கண்ட உறவினர்கள் திகைத்துப் போய் நின்றுள்ளனர். அதன் பின்னர் அவரின் மகன் ஓடிவந்து தந்தையை அனைத்து அழுதுள்ளார். பொதுவாக அப்பகுதியில் இறந்தவர்களை அன்றைய தினமே மண்ணில் புதைக்க மாட்டார்கள், இரண்டு தினங்களுக்கு பின்னரே புதைப்பார்கள்.

இதனால் அவர் உடனடியாக புதைக்கப்பட்டிருந்தால் உயிருடன் வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை, இந்த சம்பிரதாயமே அவரை காப்பாற்றியதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s