இயக்குனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்!

7ab9bed798824c478024a6d1def4ce8a_18பிரபல இயக்குநர் கௌதமன் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் கௌதமன் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தினர்.

ஆனால் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் மற்றும் இயக்குநர் கௌதமன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர். அவர்களை தரதரவென் இழுத்துச்சென்று கைது செய்தனர், இயக்குநர் கௌதமனையும் அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த தடியடி தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறவழியில் போராடியவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியது அநாகரிகமான செயல் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s