அரச உயர் அதிகாரிகள் இன்று முதல் டை, கோர்ட் அணிய தேவையில்லை – மைத்திரி!

9c632336ebcd47d5bdc4231005519fe9_18அரச உயர் அதிகாரிகள் முற்றுமுழுதாக ஐரோப்பிய முறைப் பாணியிலான ரை, கோட் அணியவேண்டுமென முன்னாள் ஆட்சியாளர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தான் நிராகரிப்பதாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்திலுள்ள உயர் அதிகாரிகள் இதன் பின்னர் அவசியமான வேளைகள் தவிர்ந்த நேரங்களில் ‘டை, கோட்’ போன்ற மேலைத்தேய ஆடை அணிவது கட்டாயமல்ல எனவும் அறிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31 ஆம் நாள் பொலன்னறுவையில் இடம்பெற்ற வருடாந்த பிரித் நிகழ்வொன்றுக்கு நான் சென்றேன். நான் அங்கு செல்லும் போது இரவு 11.00 மணி இருக்கும். அங்கு எமது பிரதேச செயலாளர் டை, கோர்ட் அணிந்த நிலையில் பிரித் கேட்டுக் கொண்டிருந்தார். இரவு நேரமல்லவா? இந்த நேரத்திலும் டை, கோர்ட் அணிந்து கொண்டிருக்க வேண்டுமா? என நான் அவரைக் கேட்டேன். அவர் அந்த சுற்றுநிருபப் படியே அவ்வாறு ஆடை அணிந்திருப்பார் என நான் நினைத்தேன்” என ஜனாதிபதி இதன்போது தனதுரையில் நினைவுபடுத்தினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s