தொடர்ந்தும் இனவாதத்தை கக்கும் ஜ.தே.க- மயூரன் குற்றச்சாட்டு

5025706_3_41e6_donald-trump-lors-d-un-meeting-a-greeley_dc7fe99c2053483d74ae4a4a505598ffதொடர்ச்சியாக இனவாதத்தை வெளிப்படுத்தி வருகின்ற கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுவதாகவும் அந்த கட்சியில் இருக்கும் எவாராலும் தமது கருத்துக்களை உரத்து தெரிவிக்க முடியாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘‘இனவாதத்தின் வரலாற்றுப் பக்கங்கள் காலத்துக்குக் காலம் தென்னிலங்கை அரசியல் வாதிகளினால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வரும். இது மாற்றியமைக்கப்பட எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

விஜயகலா மகேஸ்வரன் தேசிய அரசிலும், ஐ.தே.கட்சிலும் ஓர் உறுப்பினர். பிரபாகரன் உலகின் சிறந்த தலைவர் என்றும் நாட்டின் பிரதமராக பதவி வகிக்க தகுதியானவர் என்பதையும் தெரிவித்தமையால் விமர்சனங்களுக்குள்ளும், கண்டனங்களுக்குள்ளும் ஆளாகியுள்ளார்.

தனது கருத்தினை ஏற்றுக்கொள்ளவோ, ஜீரணிக்கவோ அவரது கட்சிக்காரர்கள் மறுக்கின்ற பட்சத்தில் தொடர்ந்தும் அந்த கட்சிக்குள் இருந்து கொண்டு உண்மையையும், உரிமைக்குரலையும் ஒலிக்க முடியாது.

ஐ.தே.கட்சி ஒரு இன வாதக்கட்சியாகவே பதிவு செய்யப்பட்டது. ஆட்சி பீடத்தில் ஏறுவதற்காக காலத்துக்கு காலம் சிறுபான்மை இனங்களின் மீது கரிசனை காட்டுவதாக வேசமிட்டாலும் பேரினவாதப் பிடிக்குள் இருந்து அவர்கள் வெளியேற மாட்டார்கள், வெளியேறவும் முடியாது.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் தடைகள் பலதாண்டித்தான், அரசியல் ஒறுத்தல்களுடன் உரிமைக்காக குரல் கொடுக்க முடியும். அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே சிறப்பான தெரிவாக இருக்க முடியும்.

இனவாதக் கட்சி ஒன்றுக்குள் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் கட்சி என ஏற்றுக்கொண்டவர், இணைந்து செயற்பட அண்மைக்காலங்களில் சமிக்ஞையை வெளிப்படுத்தியவர். கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டால் துணிவுடன் செயற்பட த.தே.கூட்டமைப்பை அவர் தெரிவு செய்ய முடியும்’’ எனவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s