அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அரசாங்கத்திற்குள்ளேயே சதி!

5025706_3_41e6_donald-trump-lors-d-un-meeting-a-greeley_dc7fe99c2053483d74ae4a4a505598ffபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில் அதனை தவிடுபொடியாக்குவதற்கு அரசாங்கத்திற்குள்ளேயே சில பிரிவினர் முயற்சி செய்துவருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தக் குழப்பகரமான சூழ்நிலையை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தைக் காண்பித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளும் முயற்சியில் முன்னாள் ஆட்சியாளர் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தைத் தோற்கடிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நவ சமசமாஜக் கட்சியின் 39ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நவசமசமாஜக் கட்சி உறுப்பினர்களான அருட்தந்தை சக்திவேல், திருநாவுக்கரசு, சுந்தரம் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண,

“ஜனநாயகவாத அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்குள் இருக்கின்ற பிரிவினரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கொண்டுவருகின்ற யோசனைகளும் பிழையானதாகவே உள்ளன. அதனை தடுப்பதற்கு இதர தரப்பினரின் உதவிகளும் பெறப்பட்டு அதற்கெதிராக போராடவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கி நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும். அபிவிருத்தி தொடர்பில் அதிகாரமுடைய குழு அல்லது நபரை நியமிக்கும் யோசனை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு ஒன்றை உருவாக்காமல் அபிவிருத்தியை வலுப்பெறச் செய்யும் யோசனை கொண்டுவருவது எதற்காக என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

இதற்கான காரணமும் விளங்கவில்லை. ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பை வலுப்பெறச் செய்யாமல் அபிவிருத்திப் பயணத் தீர்மானங்களை மேற்கொள்வது முட்டாள்தனமானது. 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். அது வெறும் கனவுதான் என நான் கூறுகின்றேன்.

எனினும் அவர் வெறுமனே அதனை கூறவில்லை. அதிகாரத்தைக் கூறி ஆட்சியைப் பெறவே முயற்சிக்கின்றார். மற்றவர்களிடையே அதிகாரப்போட்டி இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவரை சுற்றிலும் மக்கள் திரண்டுகொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s