அடுத்த வருடம் ஆட்சி கவிழ்க்கப்படும்’ மஹிந்தவின் கூற்றுக்கு காரணம் என்ன?

1021068475அடுத்த வருடம் எவ்வாறு பார்த்தாலும் மிக முக்கிய வருடமாகவே இருக்க போகிறது. ஜாதகத்தில் ஒன்று கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி உண்டு. பிறந்த இலக்கிண ராசி சக்கிரத்தில் சந்திரன் நின்ற வீடே அவரது ராசியாகும்.

12 வீடுகளை கொண்ட சக்கிரத்தில் ஒவ்வொரு வீட்டையும் ஆளும் கிரகம் ஒன்று உண்டு. அதனையே அந்த ராசிக்கான ராசிநாதன் என்கிறோம்.

எந்த சந்தர்ப்பத்திலும் சக்கரத்தில் ராசிநாதன் பலமாக இருந்தால் எந்த தோஸம் அல்லது பிரச்சினை வந்தாலும் அதனை சமாளித்துவிடலாம்.

ஆனால் ராசிநாதன் உச்சத்தில் இருந்துகொண்டு 8 இல் மறைந்தால் அந்த ராசிகாரருக்கு அதோ கதிதான்.

பல பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்துக்கொண்டே இருக்கும்.அந்த காலத்தில் வாழ்கை போராட்டமாக இருக்கும். இப்போது இலங்கைக்கும் அத்தகைய நிலைமையே உருவாகியுள்ளது.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கிய நல்லிணக்க அரசாங்கத்தில் ஒரு சிறு இணக்கமே இல்லாத நிலை தோன்றியுள்ளது.

எப்போது இந்த முரண்பாடு முற்றி வெடிக்கும் என தெரியவில்லை. ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை இரு கட்சிகளும் ஊடக சந்திப்பின் போது வெளியிட்டு வருகின்றன.

அந்த செய்திகள் தேசிய தொலைக்காட்சி மற்றும் தேசிய வானொலியிலும் ஒலி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

அது ஒரு கேலி கூத்தாக மாறிவருகிறது. மொத்தத்தில் இந்த நாட்டை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, ஒரு பக்கம் தனியார் பஸ் வேலை நிறுத்தம், தபால் ஊழியர் நிறுத்தம், வடக்கில் ஆசிரியர் ஆர்ப்பாட்டம், பொருத்து வீட்டுக்கெதிராக போராட்டம், பொருட்களின் விலை ஏற்றம், நாட்டின் கடன் பல, இந்திய,சீன பக்க சார்ப்பு கொள்கை முரண்பாடு, அரசியல் யாப்பு திருத்த பிரச்சினை , பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு, விசேட அமைச்சர் மசோதா பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன.

இதில் எதற்கும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் மேற்குறிப்பிட்ட கருத்து வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவிப்பதற்கு நாட்டின் உறுதியற்ற நிலைமையே முக்கிய காரணமாகும்.

ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டு வருடங்கள் கூட பூர்த்தியடையாத நிலையில் இந்த ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளமை கவலைக்குரியது.சில வேளைகளில் அமைச்சரவை பேச்சாளர் யார் என்று கூட யுகிக்கமுடியவில்லை என்றால் பாருங்கள்.

இந்த நிலைமைகளை பார்க்கும் போது, சமகால ஆட்சி விழும் போன்றுதான் தெரிகின்றது.

ஆனால் அப்படி வீழ்ச்சிடைய விடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகரை சாரும்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எது எவ்வாறாக இருந்தாலும் 2015ம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தோல்விக்கு பின்னல் தமது அரசியல் மீள் பிரவேசம் பற்றி பேச விரும்பாத ராஜபக்ஸ, ஆணித்தரமாக ஆட்சி கவிழ்ப்பு பற்றி முதல் முறையாக கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மை.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்தர கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கம் உருவாகலாம் என்றும் ஊகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s