யாழில் ஓயாத வாள் வெட்டு!! ஆசிரியர் இருவர் உட்பட 5 பேர் படுகாயம்…!

andrea-jeremiah-beautiful-saree-photos-1நவாலிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள் வெட்டில் ஆசிரியர் இருவர் உட்பட 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம் நவாலிப் பகுதியில் நேற்று மாலை 05 மணியளவில் (25.12.2016) இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதலில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

நவாலி தெற்கு சென் பீற்றேர்ஸ் வீதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நவாலி மணிமண்டபம் பகுதியில் இடம்பெற்ற மரண நிகழ்வு ஒன்றில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதன் எதிரொலியாக நவாலி அரசடிப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்கு பின்னர் குறித்த இரண்டு இளைஞர்கள் சார்பிலும் இரண்டு குழுக்கள் மோதலில் ஈடுபட்டன. பின்னர் அப்பகுதியில் உள்ளவர்களால் இரண்டு குழுக்களை சேர்ந்தவர்களும் சமாதானப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று நத்தார் தினத்தன்று மாலையில் குறித்த இளைஞர் குழுக்களில் ஒன்று ரஞ்சித் என்பவரின் தலைமையில் வாள்கள், இரும்பு கம்பிகளுடன் வந்து சென்.பீற்றேஸ் வீதிப்பகுதிக்கு மதுபோதையில் வந்து அங்கிருந்த இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் நவாலி சென் பீற்றேஸ் வீதியில் வசித்து வந்த பிரணீத் என்ற மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர் காது மற்றும் முள்ளந்தண்டு பகுதியில் குத்துக் காயங்களுக்கு உட்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மேலும் 04 இளைஞர்கள் வாள்வெட்டு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினால் இன்று மாலை நவாலிப் பகுதியில் பதற்றம் நிலவியது. பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் இராணுவத்தினரும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s