… மாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்.!

andavan-kattalai-first-look-posterகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்கும் தீர்மானம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.  இதன் போதே இந்த தீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராடாளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது

19438615_303

இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் குறித்த தீா்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இதனை தொடா்ந்து இணைத் தலைவா்களும் அங்கீகரிக்க கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏகமனதாக எடுத்துள்ளது.

இருப்பினும் கடந்த கால ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல தீா்மானங்கள் எடுக்கப்பட்டு அது அடுத்து வரும் நாட்களில் அவை அவ்வாறே கைவிடப்பட்ட நிலைமைகளே அதிகம் எனவும் ஆனால் இந்த தீா்மானத்திற்கும் அந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் கலந்துகொண்ட பொது அமைப்புகள்  கருத்து தெரிவித்துள்ளன.

அத்தோடு மாவீரர் துயிலுமில்லங்கள் யாரால் புனித பிரதேசங்களாக அறிவிக்கப்பட வேண்டும் அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் நடவடிக்கைகள் என்ன? எப்படி யாரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடு்க்கப்படவேண்டும் போன்ற விடயங்கள் தொடா்பில் எந்தக் கருத்து பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s