களுதாவளைக் கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்கப்பட்டுள்ளது

andavan-kattalai-first-look-posterமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புக்கு பாசிக்குடா கடற்கரையிலிருந்து வடக்கே 20 கடல் மைல் தொலைவின் ஆழ்கடல் பகுதியில் இயந்திர பாகங்கள் காணப்படுவதாக கடந்த திங்கட்கிழமை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரிவித்திருந்தனர்.

பாசிக்குடா கடற் கரையிலிருந்து 20 கடல் மைல் வடக்கு நோக்கி வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியிலேயே இவை தென்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் கடலில் காணப்பட்ட உதிரிப்பாகங்களை பார்வையிட்டு அதனை விமானத்தின் பாகங்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை கடற்படை மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் கடலில் மீட்கப்பட்ட உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த உதிரிப்பாகம் விமானத்தின் பாகத்தினை ஒத்து காணப்படுவதனால் ஆய்வு செய்யும் வகையில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் கடலில் இருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகத்தில் ரஷ்ய மொழியிலான எடுத்துக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, களுதாவளைக் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட ஜெட் விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் உதிரிப்பாகம் தொடர்பில் ஸ்ரீலங்கா விமானப்படையினருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s