2016 இல் மாத்திரம் ஏ-9 நெடுஞ்சாலையில் 117பேர் பலி!

19438615_303சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும்.

இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s