வடக்கிற்கு வெடிபொருட்கள் கடத்திய மூவர் கைது!

1021068475வவுனியா மாவட்டம் ஏ-9வீதி, முறிப்புப் பகுதியில் வைத்து வெடிபொருட்களுடன் மூவரைக் கைதுசெய்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதிக் காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய, வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடாத்தியபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதவாச்சியிலிருந்து வடக்குநோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே டெற்றோநேற்றர் – 199, டெற்றோநேற்றர் தொப்பி – 200 மற்றும் 10 மீற்றர் நீளமான வயர் றோல் 5, பயணப் பை 2 உட்பட முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிபொருட்களை கடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s