யாழ் போதனாவைத்திய சாலையில் மருத்துவ உலகில் ஓர் மகத்தான சாதனை

1021068475யாழ் போதனாவைத்திய சாலையில் கடந்த வியாழக்கிழமை (15-12-2016) மருத்துவ உலகில் ஓர் மகத்தான சாதனை வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.

நவீன உலகில் மனித இனம் பல முன்னேற்றப்பாதைகளில் சென்றுகொண்டிருக்கும் இக் காலகட்டத்திலும் மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக பல குறைபாட்டு நோய்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அந்தவகையிலே scoliosis எனப்படுவதுவும் ஒரு பாரதூரமான குறைபாட்டு நோயாகும்.

இது முள்ளந்தண்டு வடமானது பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றது.

பொதுவாக பெரியவர்களையே அதிக அளவில் பாதிக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியாத போதிலும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

பலவகையான சோதனைகளை அறிவியலாளர்கள் மேற்கொண்ட போதிலும், இதற்கான சரியான காரணத்தை இன்னும் யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் இது ஒருவகையான மரபணுக் கோளாறு என்பதை மட்டும் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த நோயானது, பெரும்பாலும் பெண்களைத் தாக்கக்கூடியது.

இதன் மூல காரணம் என்னவென்று அறியப்படவில்லை. இந்நோயானது தானாக ஏற்படவும் வாய்ப்புண்டு அல்லது, பருவ வயதில் திடீர் வளர்ச்சி காரணமாகவும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட அனுராதபுரம் பகுதியை சேர்ந்த செவ்வந்தி செனவிரட்ன எனும் 14 வயது பெண்ணிற்குத்தான் இந்த மகத்தான சாதனை யாழ் போதனாவைத்தியசாலையில் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சரியாக காலை 8 மணிக்கு புதிய சத்திரசிகிச்சைக் கூடத்தில் எலும்பு முறிவு வைத்திய நிபுணர்கள்,மயக்கமருந்து நிபுணர்கள்,மற்றும் உதவி வைத்தியர்கள்,தாதியர்கள்,கதிர்ப்பட உத்தியோகஸ்தர்கள்,எனைய உத்தியோகஸ்தர்களின் கூட்டு முயற்சியில் இந்த பாரிய சத்திரசிகிச்சை ஆரம்பமாகியிருந்தது.

சுமார் 7 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சை பாரிய வெற்றியை அளித்துள்ளது.

மிகக் குறைந்த தொழில் நுட்ப உபகரணங்களே காணப்படும் நிலையில் அவற்றினை கொண்டு மிகவும் சிறப்பாக இந்த மிகப்பெரிய சாதனையை எட்டியிருப்பது என்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் மட்டுமன்றி எமது மண்ணிற்கும்,யாழ் போதனாவைத்தியசாலைக்கும் பெருமை தேடித்தந்த ஒரு விடயமாகும்.

அது மட்டுமல்லாமல் சத்திர சிகிச்சைக்கு பின்னரான கவனிப்புக்களிற்கு உறுதுணையாக நின்ற வைத்தியர்கள், தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள்,

தற்போது நோயாளியை பராமரிக்கும் விடுதி இலக்கம் 17 ல் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,ஏனைய உத்தியோகஸ்தர்களும் இந்த விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s