யாழ்.தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை!


1021068475யாழ்.தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி

அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை எனவும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஈ.பி.டீ.பி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவார்கள் எனவும் ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டீ.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – டக்ளஸ்

வடமாகாணசபையில் ஊழல் நடப்பதாக கட்சி சார்ந்தவர்களே முதலில் குற்றஞ்சாட்டினார்கள் என்பதால் நாங்கள் மத்திய அரசாங்கம் தலையிட்டு இந்த விடயத்தை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று(19) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், தங்கள் மீது குற்றம் இல்லை என்றால் பகிரங்கமாக விசாரணைக்கு ஒத்துக் கொள்ளலாமே. எதற்காக பொதுவான குற்றச்சாட்டை சிலர் தங்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாக எடுக்கிறார்கள்?

இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சு மீதான விவாவதத்தின் போது வடமாகாணசபைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் கடந்த ஆண்டு 23 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1.2 பில்லியனே நிதி செலவிடப்பட்டிருப்பதாகவும் மாகாணசபையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய வேண்டும் எனவும் அவர் சபையில் கூறினார்.

எனவே வினைத்திறன் மட்டுமல்ல அவர்களுக்கு அந்த விடயத்தில் அக்கறை உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். ஏனெனில் திருடனைத் திருடனே விசாரிக்க முடியாது.

எதிர்க் கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் எழுதிய கடிதத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா மீதும் ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s