VTC சாரதிகளுக்கு இடையே கலவரம்!! – ஏழுபேர் அதிரடி கைது!!

1032871903VTC சாரதிகளுக்கு இடையே இடம்பெற்ற வாய் தகராரின் முடிவில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 சாரதிகள் பரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து VTC சாரதிகள் கடந்த மூன்று நாட்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை VTC சாரதிகள் சிலர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சாரதிகளுக்கும் கலந்துகொள்ளாத சாரதிகளுக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடுகள் இடம்பெற்றது. வாய் தர்க்கள் மிக மோசமாகி தாக்குதல் நிலமைக்குச் செல்ல, காவல்துறையினர் அதிரடியாக 7 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஆர்ப்பாட்டம் செய்த 6 பேரும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிசில் இருந்து விமான நிலையங்களுக்கு நேரடியாக மகிழுந்து போக்குவரத்தினை மேற்கொள்ளும் குறித்த VTC சாரதிகள் தங்களுக்கான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் நேற்றைய தினம் வாடிகையாளர் ஒருவர் VTC சாரதியினால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s