50 மில்லியன் டொலர் மோசடி! அமெரிக்காவில் சிக்கிய சிறிலங்கா வர்த்தகர்

1032871903 பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்காவை சேர்ந்தவருக்கு அமெரிக்க நீதி திணைக்களத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முதலீட்டாளர் என அறியப்படும் எட்வட் உட்பட 6 பேருக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்தியமை அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

அதிக அனுகூலங்கள் வழங்குவதாக கூறி அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளின் மக்கள் அவர்களினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க அனுகூலங்களை பெற்றுக் கொண்டு அவர்கள் இந்த முதலீட்டை மேற்கொள்வதாக கூறிய போதிலும், அது போலியான தகவல் எனவும், அவ்வாறு அரசாங்கத்தின் ஊடாக எவ்வித அனுகூலங்களும் கிடைக்கவில்லை என நீதி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை அவர்கள் இந்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனக்கு இது தொடர்பில் அமெரிக்கா அல்லது தூதரகத்தில் அறிவிப்பு விடுக்கப்படவில்லை சிறிலங்கா முதலீட்டாளர் தெரிவித்துள்ளார். தான் முதலீடுகளை மேற்கொள்பவர் அல்ல எனவும் முதலீட்டிற்காக ஆலோசனை வழங்குவது மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s