பாடசாலை விடுமுறையின் முதல் நாள் இன்று! – ஐந்தாவது நாளாக திறக்கப்படாத ஈஃபிள் கோபுரம்!

1048441175பொதுமக்கள் பார்வைக்கு ஈஃபிள் கோபுரம் ஐந்தாவது நாளாக மூடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பலர் தங்கள் கோபங்களை பதிவேற்றி வருகிறார்கள்.

இன்று சனிக்கிழமை, கிருஸ்துமஸ் விடுமுறையின் முதல் நாள் ஆரம்பித்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. சில கோரிக்கைகளை முன் வைத்தும், சில அங்கீகாரங்களை கோரியும் 100க்கும் உட்பட்ட ஈஃபிள் கோபுர பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த நான்கு நாட்களாகவும், இன்று ஐந்தாவது நாளாகவும் ஈஃபிள் கோபுரம் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படுள்ளது. பாடசாலை விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 பேர்வரை பார்வையாளர்கள் கூடுவார்கள். தற்போது பலர் வந்து திரும்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது தொடர்பான ஆதங்கங்களையும், கோபத்தினையும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். ‘பரிஸ் அடையாளம் இழந்து இருக்கிறது’ என நபர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் CGT தொழிற்சங்கத் தலைவர் Philippe Martinez இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s