தேர்தல் முறை மாற்­ற­மா­னது எந்த ஒரு சமூ­கத்­தையும் பாதிப்­ப­தாக அமை­யக்­கூ­டாது

unnamedபுதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள முக்­கி­ய­மான அம்­சங்கள் தொடர்பில் பாரிய வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்­பன தொடர்­பி­லேயே மிகவும் தீர்க்­க­மான முறையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

விசே­ட­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேர்தல் முறை மாற்றம் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பது தொடர்பில் சர்ச்­சை­யான நிலை­மை­யொன்று தொடர்ச்­சி­யாக நீடித்து வரு­கின்­றது. விருப்­பு­வாக்­கற்ற தொகு­தி­மு­றையில் அமைந்த தேர்தல் முறைமை முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று ஒரு தரப்­பி­னரும் தொகுதி மற்றும் பிர­தே­ச­வாரி என இரண்டு முறை­மை­களும் உள்­ள­டங்­கிய கலப்புத் தேர்தல் முறைமை உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டு­மென மற்­று­மொரு தரப்­பினர் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி சிறு­பான்மை மற்றும் சிறு அர­சியல் கட்­சிகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பாரிய சிக்­க­லான நிலை­மையில் உள்­ளன. சிறு­பான்மை மற்றும் சிறிய அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நிதித்­து­வங்­க­ளுக்கு புதிய தேர்தல் முறை­மை­யினால் ஆபத்து ஏற்­பட்­டு­விடுமா என்ற ஒரு அச்­சமும் அனைவர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கின்­றது. எது எவ்­வா­றி­ருப்­பினும் தேர்தல் முறை­மையை மாற்­றியே தீர­வேண்­டு­மென்ற பாரிய நோக்­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி காய்­களை நகர்த்தி வரு­கி­றது.

மறு­புறம் ஐக்­கி­ய­தே­சியக் கட்சி விருப்­பு­வாக்­கற்ற தேர்தல் முறைமை கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­னாலும், அது­தொ­டர் பில் தீவி­ர­மான நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. காரணம் தற்­போ­தைய பிர­தேச வாரி தேர்­தல்­மு­றை­மையை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியே அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எனவே அந்த முறை­மையை முற்­று­மு­ழு­தாக நீக்­கி­வி­டு­வ­தற்கு அக்­கட்சி முழு அளவில் தயா­ராக இல்லை என்­பது தெளி­வா­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டதன் பின்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யி­லுள்ள அதி­கா­ரங்­களை குறைக்கும் நோக்கில் அர­சி­ய­ல­மைப்பில் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தார். இதன்­போது 19 ஆவது திருத்த சட்­டத்­திற்கு ஆத­ரவு அளித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 20 ஆவது திருத்த சட்­ட­மாக தேர்­தல்­மு­றை­மையில் மாற்­றத்தைக் கொண்­டு­வ­ர­வேண்டும் என்ற நிபந்­த­னையை முன்­வைத்­தி­ருந்­தனர்.

எனினும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­ததன் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்­ட­தாக தேர்தல் முறை மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் தற்­போது அனைத்து அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளி­னாலும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஆரா­யப்­பட்டு வரு­கி­றது.

இந்த இடத்தில் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது மூன்று முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்­கி­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வதல் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­கா­ரப்­ப­கிர்வில் அமைந்த தீர்வு காணுதல், தேர்தல் முறை­மையை மாற்றி அமைத்தல் ஆகிய மூன்று விட­யங்கள் தொடர்பில் பிர­தான வழி­ந­டத்தல் குழு ஆராய்ந்து வரு­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் இந்தக் குழு­வா­னது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஏற்­க­னவே ஆராய்ந்­தி­ருக்­கி­றது. இதன்­போது பல்­வேறு முறை­மைகள் தொடர்பில் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளினால் ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்தப் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் சேர்ந்த 21 பேர் அங்கம் வகிக்­கின்­றனர். இந்த 21 பேரும் கடந்த காலத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற பல்­வேறு யோச­னைகள் குறித்தும் ஆராய்ந்து வரு­கின்­றனர். அதா­வது விருப்பு வாக்கு அற்ற தொகுதி மற்றும் பிர­தே­ச­வாரி முறைமை கலந்த தேர்தல் முறை­மைக்கு பெரும்­பாலும் அனைத்து அர­சியல் கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.

அதா­வது 70 வீதம் தொகு­தி­மு­றைமை 30 வீதம் பிர­தேச வாரி முறை­மையும் என்ற அடிப்­ப­டையில் ஒரு கலப்பு முறைமை கொண்­டு ­வரு­வது குறித்து ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­வேளை தொகுதி முறை­மையில் தேர்­தலை நடத்­தி­னாலும் விருப்­பு­வாக்­கற்ற பிர­தே­ச­வாரி முறை­மையில் மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யானது முழு­மை­யாக தேர்தல் முறை­மையை தொகுதி முறை­மைக்கு கொண்­டு­செல்­வ­தனை விரும்­ப­வில்­லை­யென்றே தெரி­கி­றது. மாறாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது தேர்தல் முறை­மையை முழு­மை­யாக தொகுதி முறை­மைக்கு கொண்டு சென்­றாலும் பர­வா­யில்லை என்ற நிலை­மை­யி­லேயே இருக்­கின்­றது. இந்த இடத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி, சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் தேர்­தல்­முறை மாற்றம் தொடர்பில் பாரி­ய­ளவில் கவனம் செலுத்­து­கின்­றன. தேர்தல் முறை மாற்றம் கொண்­டு­வ­ரப்­படின் அது முழு­மை­யாக தொகு­தி­மு­றை­மை­யாக அமைந்தால் சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் பாதிக்­கப்­படும் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. எனவே, இது தொடர்பில் சிறு­பான்மை கட்­சி­களும் சிறிய அர­சியல் கட்­சி­களும் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்.

குறிப்­பாக இந்தப் பிர­தேச வாரி தேர்தல் முறைமை என்­பது நாட்­டி­னதும் அந்­நாட்டின் மக்­க­ளி­னதும் முழு­மை­யான பிர­தி­நி­தித்­து­வத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் தொகு­தி­மு­றை­மை­யா­னது அவ்­வாறு முழு­மை­யான பிர­தி­நி­தித்­து­வத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக இல்லை என்ற கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் அர­சாங்­க­மா­னது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து கட்­சி­க­ளு­டனும் ஆராய்ந்து பரந்­து­பட்ட ரீதியில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து ஒரு தீர்­மா­னத்­திற்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் நாட்டின் சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் கிடைக்­காமல் போய்­விடும் அபாயம் ஏற்­பட்­டு­விடும். இது தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தூர­நோக்­குடன் சிந்­தித்து தீர்­மானம் எடுக்க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இரண்டு பிர­தான கட்­சி­களும் நாட்டில் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு தீர்­மா­னத்­திற்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எக்­கா­ரணம் கொண்டும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தமது கட்­சி­களின் நலன்­சார்ந்த முடி­வு­களை எடுத்­து­விட முடி­யாது. தேர்தல் என்­பது ஒரு­நாட்டின் ஜன­நா­யக கட்­ட­மைப்பின் மிகப்­பி­ர­தா­ன­மான ஒரு விட­ய­மாகும். அந்த விட­யத்தை ஒரு தரப்­புக்கு அநீதி ஏற்­ப­டும்­ வ­கை­யிலும் மற்­று­மொரு தரப்­பிற்கு அதீத நன்மை ஏற்­படும் வகை­யிலும் யாரும் செயற்­ப­டக்­கூ­டாது.

விசே­ட­மாக மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் உரிய முறை­மையில் பாரா­ளு­மன்றம், மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பிர­தி­ப­லிக்­க­வேண்டும். எந்­த­வொரு சமூ­கத்­திற்கோ எந்­த­வொரு இனத்­திற்கோ அநீதி ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இந்த விட­யத்தில் சிறு­பான்மை மற்றும் சிறிய அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து செயற்படவேண்டும். சிறுபான்மை மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கடந்த காலங்களில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அந்தவகையில் தொடர்ந்து இந்த விடயத்தில் சிறுபான்மை மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு பிரதான கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளிடையே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் புரிந்துணர்வும் இணக்கப்பாடும் அவசியமாகும்.

எனவே, மிகவும் முக்கியமான மற்றும் தீர்க்கமான இந்தத் தேர்தல் முறை தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் பரந்துபட்ட நோக்குடனும் இணக்கத்தின் அடிப்படையிலும் செயற்பட்டு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டியது அவசியமாகும் அதனைவிடுத்து தேர்தல் முறை மாற்றமானது நாட்டின் எந்தவொரு சமூகத்தையோ, இனத்தையோ பாதிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s