வடக்கு மாகாணத்தில் விகாரை அமைப்பதில் அரசியல்வாதிகளுக்கே பிரச்சனை!

421b47ffd946ca08தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்டமுடியுமென்றால் சிங்கள மக்களால் கொக்குளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சனை என வடக்கு மாகாண ஆளுநர் நேற்றையதினம் ஊடவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்திருந்தார்.

எனினும் வேறு ஒருவரின் காணியில் மக்கள் இல்லாத இடத்தில் அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் அது குற்றம் என தெரிவித்த அவர், வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாது என தெரிவித்துள்ளாார்.

மேலும், கொக்குளாயில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான அனுமதியை கரைதுரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளர் தந்துள்ளார்.

இந்த நாட்டில் யாரும் எங்கேயும் கோவில், பள்ளிகள் கட்டலாம் அது அவர்களின் பிரச்சனை. ஆனால் விகாரை கட்டுவது மக்களுக்குப் பிரச்சனையில்லை எனவும் அரசியல்வாதிகளுக்கே பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கொக்குளாய் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது விகாரை அமைப்பதற்கான காணி என தெரிவித்து குறித்த பிக்கு குறித்த காணியில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கவில்லை என்பதுடன், இக்காணி மணிவண்ணதாசுக்குச் சொந்தமானது என்பதுடன் நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s