மட்டு நகரில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு பேரணி

img_0146பல வருடங்களாகியும் காணாமல்போனவர்களின் நிலை தொடர்பில் அரசாங்கங்கள் ஏமாற்றும் நிலையையே கடைப்பிடித்துவருவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் என்னும் கூறிக்கொள்ளும் அரசாங்கமும் தங்களை ஏமாற்றும் நிலையே இருந்துவருவதாகவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற இணையம் ஏற்பாடுசெய்த மனித சங்கிலி போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு பேரணி என்பன இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றன
421b47ffd946ca08
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல்போனோர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது உணர்வுகளையும் இதன்போது வெளிப்படுத்தினர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமது உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் நிலையே இந்த நாட்டில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
troian-bellisario-patrick-j-adams-cheats-ftr
தாம் தமது உறவுகளை தொலைத்துவிட்டு மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்துவரும் நிலையில் தமக்கான சலுகைகள் கூட மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது கணவன்மார் பிள்ளைகள் கடத்தப்பட்டு காணாமல்போன நிலையில் தாம் வாழ்வாதாரம் உட்பட பல்வேறு கஸ்டங்களை தாம் எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தாங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற நிலையில் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தாங்கள் திரும்பி வந்தபோதிலும் தாம் வாழ்வாதாரத்திற்கு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s