கல்முனை சுனாமிக் குடியிருப்புக்குள் மீண்டும் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் இடப்பெயர்வு!

421b47ffd946ca08சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட அம்மபாறை மாவட்டம் கல்முனைக் கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் திடீரென கடல்நீரானது குடியிருப்புப் பகுதி நோக்கிவருவதை அவதானித்த மக்கள் அங்கிருந்து பிள்ளைகளுடன் உயர்வான பகுதியைநோக்கிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் விஸ்ணு ஆலயம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது பாதுகாப்பு கருதி அவர்களது பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தது மக்கள் சுனாமியாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் இதுவரை மீள்குடியேற்றப்படாத நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தாம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதப் பகுதியில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

download download-1 download-2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s