ஊழி­யர்­களின் அடா­வ­டித்­தனம் தொடந்தால் துப்­பாக்­சி­சூடு நடத்­தவும் தயங்க மாட்டோம்

img_0146அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இரண்டு கப்­பல்­களைச் சிறைப்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யினால் கடற்­ப­டை­யினர் தலை­யிட வேண்டி ஏற்­பட்­டது. எனினும் ஊழி­யர்­களின் அடா­வ­டித்­தனம் தொடந்தால் துப்­பாக்­சி­சூடு நடத்­தவும் தயங்க மாட்டோம் என தெரி­வித்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன.

தொடர்ந்தும் போராட்­டத்தில் ஈடு­பட்டால் கடற்­ப­டையைக் கொண்டு துறை­மு­கத்தை கொண்டு செல்வோம் என்றும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வரவு – செலவு திட்­டத்தின் நிதி அமைச்சு குழு நிலை விவாதத்தின் போது சர்ச்­சைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரியின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்ட வாறு தெரி­வித்தார்.

அம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­யர்­களின் தாக்­குதல் தொடர்பில் கடற்­படை தள­ப­தி­யி­டமும் அம்­பாந்­தோட்டை கட்­டளைத் தள­ப­தி­யிடமும் விசா­ரித்தேன். இங்கு ஊழி­யர்­க­ளுக்கு தாக்­குதல் நடத்­தப்­படவில்லை. இது முற்­றிலும் பொய்­யாகும்.

அங்­குள்ள ஊழி­யர்கள் இரு கப்­பல்­களைச் சிறைப்­பி­டித்­துள்­ளனர். இதன் கார­ண­மா­கவே கடற்­ப­டை­யினர் தலை­யிட்­டனர். எனினும் தாக்­குதல் நடத்­த­வில்லை. இங்­குள்ள கப்­பல்­களில் ஜப்பான் நாட்­டுக்கு சொந்­த­மான கப்­பலும் உள்­ளது. இதனால் சர்­வ­தேச அளவில் பிரச்­சி­னைகள் ஏற்­படும்.

இந்­நி­லையில் தற்­போது பிரச்­சினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எனினும் ஊழி­யர்கள் தொடர்ந்தும் இவ்­வாறு செயற்­பட்டால் துப்­பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம். அத்­துடன் போராட்­டத்தை உடன் கைவிட வேண்டும் இல்­லையேல் கடற்­ப­டை­யி­னரைக் கொண்டு துறை­மு­கத்தைக் கொண்டு செல்வோம்.

இதன் போது நாமல் ராஜபக் ஷ எம்.பி. பேசு­கை­யில் ­க­டற்­படை தாக்குதல் நடத்தவில்லை எனக் கூற வேண்டாம். 8 பேர் காயமடைந்துள்ளர் இங்கு பேசிய சுஜிவ சேனசிங்க எம்.பி. யார் தாக்கினர் இராணுவத்தினரேயாவர் என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s