யாழ் பல்கலை மாணவர் உயிரிழப்பை அடுத்து இராணுவத்தை களமிறக்கும் திட்டத்தை தடுத்தேன்.

7373da71f0cc57f98a8fb52a2b40e36fயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கலகத்தை தடுப்பதற்காக இராணுவத்தை அங்கு குவிப்ப தற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தாமே நிராகரித்ததாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைப் போன்று தெற்கில் இடம்பெற்றிருந்தால் பாரியதொரு களேபரம் ஏற்பட்டிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்ற த்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  “யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியான சம்பவம் தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். சிலவேளை இந்த சம்பவம் தெற்கில் இடம்பெற்றி ருந்தால் பாரதூரமாக களேபரம் ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவத்தின் பின்னர் இராணுவத்தை களமிறக்குவோமா என என்னிடம் கோரினர். எனினும் அதனை நான் நிராகரித்ததோடு பொலி ஸாரைப் பயன்படுத்துவோம் என்று கூறினேன்.  – என்றார்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s