60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் தமிழக முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது!

18114265_303மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் உடல் சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை மரீனாக் கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் இராணுவ மரியாதையுடன், 60 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அவரது நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் ராகவ் ஆகியோர் இறுதிச் சடங்கினைச் செய்துள்ளனர்.

ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

பின்னர் ஜெயலலிதாவின் உடலைப் போர்த்தியிருந்த தேசியக் கொடி அவரது தோழி சசிகலா பெற்றுக்கொண்டதன் பின்னர் கண்ணாடிப்பேழையிலிருந்த ஜெயலலிதாவின் உடல் சந்தனப்பேழைக்கு மாற்றப்பட்டது.

பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் காலமானார்.

முதல்வர் மறைவை அடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு  துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

jj_3099950f

10303_dmr_4209 10252_dmr_4147 10195_dmr_3973 10181_san_4103 10165_dmr_3936 10159_sat_2384 jaya_4

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s