சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – அரசாங்கம்!

1026245785புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படுமெனவும் சிறீலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், சமஷ்டி குறித்து சிலர் பொய்யான தகவல்களை நாட்டில் வெளியிட்டு இனவாத, மதவாத அரசியலை நடாத்த முனைகின்றனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படை வாதத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தரப்பின் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நடுநிலையாக செயற்பட இணைந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கல்ல, ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

1987 இல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நாடு பிரியும், வடக்கு கிழக்கு இந்தியாவின் மாநிலங்களாக மாறும், இங்குள்ளவர்கள் வடக்கு, கிழக்கு செல்வதற்கு நுழைவிசைவு எடுக்க நேரிடும் என அச்சுறுத்தினார்கள்.

அதனை மீறி மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிரணி போன்ற கட்சிகளினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

எனவே பொய்யான அச்சம் தேவையில்லை. இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி நாட்டை தீவைத்துக்கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s