யுத்தத்தில் போராடியவர்களை சிறையில் போடுவது நல்லதல்ல! – இப்படிக் கூறுகின்றார் ரணில்

1026245785“யுத்தம் செய்து – போராடி நாட்டுக்கு சேவை செய்தவர்களை சிறையில் போடுவது கொள்கை அடிப்படையில நல்லதல்ல” – என்று சபையில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிமசிங்க.
நாடாளுமன்றத்தில் நேற்று 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு விளக்கமொன்றை வழங்கியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரியான கே.எல்.எம்.சரத் சந்திர கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளமை குறித்து தினேஸ் குணவர்தன எம்.பி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். அவரை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க,
“இந்த விடயத்தில் அரசியல் தலையீடு இல்லை. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கே.எல்.எம்.சரத் சந்திர என்பவர் 2008.03.24 முதல் 2011.03.19 ஆம் திகதிவரை பொலிஸ் விசேட அதிரடி படைப்பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக சேவையில் ஈடுபட்டுள்ளார். இவர் 2011.03.19 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதுடன், ஓய்வுபெற்ற பின்னர் விசேட அதிரடிப் படையினருக்குச் செந்தமான ஜீப் வாகனத்தைப்  பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு இந்த ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின்போது, விசேட அதிரடிப் படையில் தற்போது சேவையாற்றுபர்கள் மற்றும் ஓய்வுபெற்ற 13 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையிலிருந்து ஓய்வுபெற்ற சரத் சந்திர, அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் இணைப்புச் செயலாளராக நியமனம் பெற்று அந்தப் பதவியை 2015.01.08 ஆம் திகதிவரை வகித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் விசேட அதிரடிப் படையினருக்குச் செந்தமான ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தியதுடன், பாதுகாப்பு அதிகாரிகளையும் பெற்றுள்ளார்.
2015.01.08 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவரது இணைப்புச் செயலாளர் பதவி  இல்லாமல்போயுள்ளது. ஆனாலும், 2015.08.24 ஆம் திகதிவரை அந்த ஜீப் வாகனத்தைக் கையளிக்காது, தனது தனிப்பட்ட செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. ஆனாலும், சில விடயங்கள் குறித்து தகவல் பதிவாகவில்லை.
இவருக்குப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து 140, 000 ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைய அரசுக்கு நிதி ரீதியாக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டு, டிசம்பர் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவருக்குப் பிணை கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 2016.11.25 ஆம் திகதி வழக்கை மீள அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அவர் ஆற்றிய சேவையைக் கவனத்தில் எடுத்து, அது குறித்து பெற்றுக்கொடுக்க வேண்டிய ஆதரவைப் பெற்றுக்கொடுக்க குறித்த விசாரணை செய்யும் பிரிவிடம் அரசு கோரிக்கை விடுத்தது.
இவருக்குப் பிணை வழங்குவதற்கான ஆவணங்களை 2016.11.28ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவானால் உத்தரவிடப்பட்டது.  அன்று நீதிமன்றத்தின் எண்ணத்திற்கமைய சந்தேகநபருக்கு பிணையைப் பெற்றுக்கொள்ள முடியும்” – என்றார்.
இதையடுத்து, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய பந்துல குணவர்தன எம்.பி., பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிதி மோசடிப் பிரிவைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார் என சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதன்போது குறுக்கிட்ட கருத்தொன்றை முன்வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“இது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட  வழக்கு அல்ல. பொலிஸ் செய்த விசாரணைகளாகும். கொள்கை அடிப்படையில், யுத்தம் செய்து, போராடி நாட்டுக்கு சேவை செய்தவர்களை சிறையில் போடுவது நல்லதல்ல என்று அமைச்சர் கூறினார். நான் ஏற்கின்றேன்.
சரத் பொன்சேகாவுக்கு என்ன நடந்தது? இழுத்துச் சென்றனர். போராடியவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டாம்  எனக் கூறி சரத் பொன்சேகாவை சிறையில் போட்டனர். மேலும், சிலரை சிறையில் போட்டனர். இராணுவம், கடற்படை, விமானப்படையிலிருந்து சிலரை நீக்கினர். இவர்களைப் பற்றிப் பேச எவரும் இருக்கவில்லை. அதனை நாம் பார்க்கவேண்டும். இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் நான் பொலிஸ்மா அதிபரைச் சந்திப்பேன். இது குறித்து கேட்பேன்” – என்றார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s