மஹிந்தானந்த அளுத்கமகேவை சிறையில் அடைக்க வேண்டும்

1026245785‘டாப் 10’ என்ற சாட்சியமற்ற போலியான முறைப்பாட்டை தாக்கல் செய்த மஹிந்தானந்த அழுத்கமகேவிற்கு எதிராக வழக்கு தாக்கல்செய்து பொய்­ ஆ­வணத்­தை சமர்ப்பித்தமைக்கு எதிராக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செலவின தலைப்பிலான குழு நிலை விவாத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வசிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியமற்ற முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கையளித்திருந்தார். இந்த முறைப்பாட்டுக் குற்றச்சாட்டு ஆவணம் மாத்திரமே ஆகும்.

இந்த முறைப்பாட்டில் சாட்சியங்களுடனான எந்தவொரு ஆவ­ண­மும் வழங்கப்படவில்லை. நாட்டின் நலனுக்காக செயற்படும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி மக்களை திசைதிரும்பும் நோக்கிலேயே ‘டாப் 10’ முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘டாப் 10’ முறைப்பாட்டின் பிரகாரம் தற்போதைய அரசில் அமைச்சர்களை விசாரணை செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும்.

ஆனாலும் ‘டாப் 10’ முறைப்பாட்டில் எந்தவொரு சாட்சியும் இல்லை. அதற்கு மறாக குற்றச்சாட்டு ஆவ­ணம் மாத்திரமே சம்ர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இது போலியான ஆவணமாகும். சட்ட விதிமுறையின் பிரகாரம் போலி­யா­ன முறைப்பாட்டை தாக்கல் செய்தால் குறித்த முறைப்பாட்டாள­ருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் பிரகாரம் ‘டாப் 10’ என்­ற பெயரில் போலியான முறைப்பாட்டை தாக்கல் செய்தமைக்காக மஹிந்தானந்த அளுத்கமவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அவ­ரை சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s