பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்த பிரான்ஸ் இலங்கையுடன் பேச்சு

1026245785இரு நாடுகளுக்கிடையிலான  இரு தரப்பு தொடர்பு மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தையினை இலங்கை பிரான்சுடன் முன்னெடுத்துள்ளது.  இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரான்ஸ் கூட்டு கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் எட்மிரல் டிடியர் பெலட்டோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுடனான சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் இரு நாட்டு பாதுகாப்பு  சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது  குறித்தும் இதன் போது பரந்தளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கடல் பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் உலக நாடுகள் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பிரான்சும் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றது.

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான  காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிடியர் பெலட்டோன் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்pபிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s