புதிய வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நானுஓயாவில் ஆர்ப்பாட்டம்

paambhu_sattai_movie_new_still-cujuqfsusaerlmv_jpg-c30b79d3200aa948b0be04154586c2a9நுவரெலியா – நானுஓயா பகுதியில் பேராதெனிய பல்கலைக்கழக, உயர்தர மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை  இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு மற்றும் சுகாதாரத்துறைக்கும் உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அத்தோடு இலவச கல்விமுறைமை தற்போது மாற்றமைடைந்து வியாபார முறையாக மாற்றம் பெற்றுள்ளது என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுதந்திரமானது இலவச கல்வி முறைமையே கானப்படுகின்றது. ஆனால், தற்போது பணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. கல்வித்துறை வியாபாரமாக்கப்பட்டு வருகின்றது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் நிதி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலவசகல்வி முறைமை இல்லாதொழியும் நிலைமை உருவாகின்றது. இது தொடர்பில் நல்லாட்சி அசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள் தாங்கள் பொருளதார ரீதியாக பாரிய பின்னடைவில் இருப்பதாகவும் எதோ ஒரு வகையில் தங்களின் பிள்ளைகளுக்கு கல்விக்காக செலவழித்து உயர்தரம் வரை கல்வி கற்றாலும், பல்கலைகழகம் தெரிவாகி செல்லும் பொழுது பொருளாதார சிக்கலின் காரணமாக பல்கலைகழகம் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும், தற்போது இலவச கல்வி முறையினனை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் தனியார் பல்கலைகழகம் அமைப்பதனால் இதற்கு அதிகப்படியான பணத்தை செலவு செய்து கல்வியினை தொடர முடியாத நிலை ஏற்படும்.

தற்போது அரச பாடசாலைகளில் போதிய வளங்கள் இல்லாமலும் நானுஓயா, நுவரெலியா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்கள் இன்மையினால் தூர பிரதேசங்களுக்கு சென்று கல்வியை தொடர வேண்டும்.

எனவே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதைவிட குறைப்பது நியாயம் இல்லை. அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s