நாளை மறுதினம் ஹொங்கொங் செல்லவுள்ளார் பிரதமர்

1மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஹொங்கொங் பயணிக்கவுள்ளார்.

15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாகவே பிரதமர் ஹொங்கொங் விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

இம்முறை 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு ஹொங்கொங்கில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு  இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு இலங்கை தலைவர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஹொங்கொங் பயணிப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

இந்த விஜயத்திற்கு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் ஆசிய பசுபிக் மாநாட்டிற்கு வருகை தரும் ஏனைய உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமையன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பவுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s