பிரமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்

3மத்திய வங்கி பிணை முறி வழங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பிரமருக்கும் தொடர்புள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடமாக நாம் தொடர்ந்தும் விடுத்துவந்த அழுத்தத்தின் காணரமாகவே மத்திய வங்கி பினை முறி வழங்களின் போது ஏற்பட்ட ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறானதொரு ஊழல் இடம்பெறவே இல்லையென்று தொலைக்காட்சி நிகழ்சிக்களில் வாதிட்டவர்கள்களும் அரசியல் மேடைகளில் பேசியவர்களும். இன்று மௌனித்துள்ளனர்.

இன்று அவர்கள் உழல் இடம்பெறவில்லை என்று போராடியவர்களையே ஐக்கிய தேசிய கட்சியினர் இந்த விவகாரத்திரனை விசாரணை செய்ய முன் நிறுத்தியிருந்தனர் அவர்கள் இன்று மரணித்து பின்னர் எழுந்தவர்கள் போல இந்த ஊழல் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது எமது வெற்றியாகும். அதனால் இதன் மறுபக்கம் தொடர்பிலும் குறிப்பிட வேண்டியுள்ளது. அரபு நாட்டில் அலிபாபாவும் நாற்பது திருடர்களுமே இருந்தனர் ஆனால் இலங்கையில் யானை திருடரும் மேலும் 10 திருடர்களுமே உள்ளனர்.

இதனில் மகா திருடர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏனைய 10 திருடர்களும் இந்த விவகாரத்தில் பிரதமர் அருகில் இருந்த  பேரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனும் ஆவர்.இவர்கள் கடந்த அரசில் இருந்த திருடர்களை பிடிப்பதாக கூறியே  ஆட்சியை கைப்பற்றினர்.

ஆனாலும் திருடர்களை பிடிக்க வந்த இவர்கள் திருடர்கள் ஆனமை போன்ற நிகழ்வு உலகில் எந்த மூலையிலும் இடம்பெறவில்லை.

மேலும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இனி கிடையாது. டியூ குணசேகர அறிக்கை வெளிவந்த போது பாராளுமன்றம் களைக்கப்பட்டது அதனால் குறித்த அறிக்கையின் விடயங்கள் கருத்திற்கொள்ளடாமையும் தவறானதாகும் அந்த கரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது படிந்துள்ளது. காரணம் அவரே அர்ஜுன் மகேந்திரனுக்கு ஆளுனர் பதவி வழங்கினார்.

அதனால் இது குறித்து இழுத்தடிப்புகள் இந்த விடயத்தில் முக்கிய பங்காளியான பிரதமர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அர்ஜுன் மகேந்திரனின் வெளிநாட்டு பயணங்களை ரத்துச் செய்துவிட்டு பேர்பச்சுவல் நிறுவனத்தின் சேவையாளர்களுக்கும் வெளிநாட்டு பயணங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

குறித்த நிறுவனம் தொடர்பில் உள்ள பணத்தொகைளை மத்திய வங்கி பரிமுதல் செய்ய வேண்டும், அதனால் மீண்டும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமலிருக்க குறித்த நிறுவனத்தின் பொருளாதார நவடிக்கைகளை முடக்க வேண்டும் பின்னர் நிறுவனத்தின் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தொடுக்க வேண்டும்.

தற்போதைய விசாரணைகளில் இலங்கை வங்கிக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகின்றமையினால் அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்ற காரணத்தை முன்னிலைப்படுத்திச் தப்பிச் சென்று விடும் சந்தர்ப்பம் உள்ளது.

பிரதமர் இந்த நடடிக்கைகளை எடுக்காவிட்டால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து அவரை வீட்டிற்கு அனுப்பவும் தயாராகவே உள்ளோம். எவ்வாறாயினும் கணக்காய்வாளர் நாயகம் பெரும் பங்கை ஆற்றியுள்ளார் அவரின் நேர்மையே இன்று உண்மை வெளிவர காரணம் என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s