ஆவா குழு என்று பொலிசார் கைது செய்த ஆட்கள் ஆசிரியர் – மாணவர் தான்

3கொக்குவில் பகுதியில் வைத்து வாள்களுடன் கைது செய்யப்பட்ட சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியின் நாடக பாட ஆசிரியரையும் செங்குந்தா இந்துக்கல்லூரி மாணவரையும் நாளை  (02.11.2016) வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நேற்று (31.10.2016)உத்தரவிட்டார். வாள்களுடன் மர்ம நபர்கள் செல்கிறார்கள் என நேற்றுமுன்தினம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு வாளினை வழங்கிய வேறொரு இளைஞரையும் தாம் கைது செய்ததாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிசார் நேற்று யாழ் நீதிமன்றில் முற்படுத்தினர். அத்துடன் கைப்பற்றப்பட்ட வாள்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளான அம்பிகா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாணவரெனவும், கடந்த வாரம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையின் நாடக பாடத்தின் செய்முறைக்கு நாடகம் ஒன்றை நடித்து காட்டுவதற்காத வாள் ஒன்றை பெற்றுக் கொண்டதாகவும் அவ்வாறு பெற்ற வாளை திருப்பி ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றையவர் நாடக ஆசிரியர் அவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கற்பிக்கின்றார் எனவும் அவரே செயன்முறை தேர்வுக்காக வாளை மாணவருக்கு நாடக மன்றம் ஒன்றிடமிருந்து பெற்றுக் கொடுத்தாகவும் தெரிவித்தனர்.

எனினும் கொக்குவில் பகுதியில் ஏற்கனவே இடம்பெற்ற சம்பவத்தால் மக்கள் பீதியுடன் காணப்படுவதாகவும் அவர்களை பீதியடையச் செய்யும் நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதாகவும் எனவே பிணை வழங்குவதற்கு பொலிசார் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து இருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s